News
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள தொழில் முனைவோரின் சந்தை வாய்ப்புக்களை மேம்படுத்துவத்துவதற்காக முல்லைத்தீவு மாவட்ட சிறு கைத்தொழில்பிரிவினால் முகப்புத்தக பக்கமொன்று (Facebook Page) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
இப்பக்கத்தின் ஊடாக மாவட்டத்திலுள்ள தொழில் முனைவோரின் உற்பத்திகளை சந்தைப்படுத்த முடிவதுடன் நுகர்வோரும் இலகுவில் உற்பத்தியாளரை தொடர்புகொள்ளமுடியும். 

முல்லைதீவில் போதைப் பொருள் பாவனையினால் ஏற்படும் பிரச்சினை தொடர்பான முறைப்பாடுகளை மேற்கொள்ள துரித இலக்கம் அறிமுகம்

நாட்டில் அதிகரித்து வரும் போதைப் பொருள் பாவனையினால் போதைக்கு அடிமையாவதைத் தடுப்பதற்கும், அவ்வாறு அடிமையானவர்களை குணப்படுத்துவதுற்குமான துரித நடவடிக்கையினை தேசிய அபாயகர ஒளடதங்கள் அதிகார சபை (NDDCB)
எடுத்துவருகின்றது.

இச்சபையினால் பொதுமக்களுக்கு அறிவூட்டும் வகையில் துண்டு பிரசுரங்கள் வெளியிடுதல், விசேட உளவள ஆலோசனைகளை வழங்குதல் போன்ற செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதுடன் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தினைக் கருத்திற் கொண்டு புதிய துரித இலக்கமான 0710301301 இனை அறிமுகம் செய்துள்ளது.

இதனூடாக பொதுமக்கள் போதைப் பொருள் பாவனையினால் ஏற்படும் பிரச்சினை தொடர்பான முறைப்பாடுகள் மற்றும் ஆலேசனைகளை 24 மணிநேரமும் குறித்த துரித இலக்கத்திற்கு தொடர்பினை ஏற்படுத்துவன் மூலம் சேவையினைப் பெற்றுக்கொள்ள முடியுமென தேசிய அபாயகர ஓளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் வெளிக்கள உத்தியோகத்தர் அன்ரனி எட்வின் றொஜர் அரச தகவல் திணைக்கள மாவட்ட ஊடகப் பிரிவிற்குத் தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் இச்சபையானது 1984ஆம் ஆண்டின் 11ம் இலக்க தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபைச் சட்டத்தின் கீழ் 1984 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 09 ஆந் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் இலங்கையில் போதையூட்டும் ஓடதங்களின் துஷ்பிரயோகத்தை தடுத்தல், கட்டுப்படுத்தல், போதையூட்டும் ஓளடத பாவனையாளர்களுக்கான சிகிச்சையளித்தல், புனர்வாழ்வளித்தல் போன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பிரதான தேசிய நிறுவனமாக செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

IMG 20200429 WA0005

இலங்கையின் 72ஆவது சுதந்திரதின நிகழ்வுகள் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இன்று (04) கொண்டாடப்பட்டது. இந் நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் திரு.ச.கனகரத்தினம் அவர்கள், மேலதிக மாவட்ட செயலாளர் மற்றும் பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

DSC 0002DSC 0033DSC 0034

ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கற்சிலைமடு கிராமசேவகர் பிரிவில் புதிதாக அமைக்கப்பட்ட பத்துக்கண் பாலத்தினை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு இன்று (03.02.2020) இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சாள்ஸ் நிர்மலநாதன் அவர்களும், முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புகுழு தலைவர் கௌரவ ச.கனகரத்தினம் அவர்களும் மற்றும் பல பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

135

நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு எனும் தொனிப்பொருளில் 2020ம் ஆண்டுக்கான முதல்நாள் கடமைகளை ஆரம்பித்தல் நிகழ்வு இன்று மாவட்ட செயலகத்தில் தேசியக்கொடி ஏற்றலுடன் ஆரம்பமானது. தொடர்ந்து ”வளர்ந்துவரும் நாட்டிற்கு வளரும் ஒரு மரம்” எனும் தொனிப்பொருளில் மரநடுகை நிகழ்வும் இடம்பெற்றது.

DSC 0694

DSC 0700

DSC 0708

கௌரவ ஆளுனரின் வழிகாட்டலின் கீழ் வடமாகாண ஆளுனர் செயலகம், வடமாகாண வீதிப்பாதுகாப்பு சபை என்பன இணைந்து நடாத்தும் வீதிப்பாதுகாப்பு வாரம் இம்மாதம் 7ம் திகதி தொடக்கம் 13ம் திகதிவரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதனையொட்டி முல்லைத்தீவு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களால் வீதிப்பாதுகாப்பு வாரத்திற்கான உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு இன்று (07) இடம்பெற்றது.

IMG 20191007 091533

 

சர்வதேச கடற்கரை சுத்தப்படுத்தல் மற்றும் கடல்சார் வளங்களை பாதுகாக்கும் வாரம் 16 செப் தொடக்கம் 21 செப் வரை கடைப்பிடிக்கப்பட்டுவருகின்றது. அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் (18.09.2019) இன்று கடற்கரை துப்பரவுசெய்யும் நடவடிக்கைகள் மாவட்ட செயலாளர் திருமதி.றூபவதி கேதீஸ்வரன் அவர்களின் தலைமையில் முள்ளிவாய்க்கால் கடற்கரையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுடன் பொதுமக்கள் பலரும் வயது வேறுபாடின்றி கலந்துகொண்டனர்.

3 2 1

எமது மேலதிக மாவட்ட செயலாளராக கடமையாற்றிய திரு.கோ.தனபாலசுந்தரம் அவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இடமாற்றம்பெற்று செல்லும் நிலையில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் திரு.M.பிரதீபன் அவர்கள் மேலதிக மாவட்ட செயலாளராக இன்று (09.09.2019) கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

DSC 0355

 

20190722 155948

அரச அதிபர் வெற்றிக்கிண்ணம் - 2019

அரச அதிபர் வெற்றிக்கிண்ணம் - 2019க்கான விளையாட்டுப்போட்டிகள் 03.09.2019 அன்று மாவட்ட செயலகத்தில் சதுரங்க விளையாட்டுடன் ஆரம்பமானது. இந் நிகழ்வினை மாவட்ட செயலாளர் திருமதி.றூபவதி கேதீஸ்வரன் அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.

DSC 0230DSC 0269

வடமாகாண சுகாதார சேவைகள் பணிமனை அதிகாரிகளும், உத்தியோகத்தர்களும் இன்று (02.08.2019) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு உற்பத்திதிறன் தொடர்பான கள ஆய்வுக்காக விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

DSC 0170

DSC 0168

DSC 0169

2019ம் ஆண்டுக்கான 2ம் கட்ட பட்டதாரிப்பயிலுனர்களுக்கான நியமனக்கடிதங்கள் இன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலாளர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் அவர்களின் பங்கேற்புடன் வழங்கிவைக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்டத்தில் 112 பட்டதாரிகள் இந் நியமனத்தின்பொருட்டு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்கள். 

 

DSC 0106

DSC 0104

DSC 0162

DSC 0163

இலங்கை சனநாயக சோஷலிசக் குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் இன்று (08.06.2019) முல்லைத்தீவுக்கு நாட்டுக்காக ஒன்றிணைவோம் நிகழ்வுக்காக வருகைதந்தார். இன்று காலை 10.00மணியளவில் உலங்குவானூர்தி மூலம் முல்லைத்தீவுக்கு வருகைதந்த ஜனாதிபதி அவர்களை மாவட்ட செயலாளர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் அவர்கள் வரவேற்ரார். தொடர்ந்து மாவட்ட செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள SMART ஸ்ரீலங்கா கட்டிடத்தினை திறந்துவைத்ததுடன் மரக்கன்று ஒன்றினையும் மாவட்ட செயலக வளாகத்தில் நாட்டினார். அதனை தொடர்ந்து மாவட்ட செயலக முன்றலில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் பயனாளிகளுக்கான உதவித் திட்டங்களையும், காணி உறுதிப்பத்திரங்களையும் வழங்கிவைத்தார்.
 
முல்லைத்தீவு மாவட்டத்தில் 03.06.2019 தொடக்கம் 08.06.2019 வரை இடம்பெற்ற நாட்டுக்காக ஒன்றிணைவோம் தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் நான்காம் கட்ட நிகழ்வில் 1178 வேலைத்திட்டங்கள் 311.97மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்பட்டிருந்த்து. இத்திட்டங்களினூடாக 68,586 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.
DSC 0058
20190608 123539
DSC 0061

நாட்டுக்காக ஒன்றிணைவோம் - தேசிய நிகழ்ச்சித்திட்ட நான்காம் கட்ட நிகழ்வுகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆரம்பமாகியுள்ள நிலையில் 03.06.2019 இன்றய நாளுக்கான 169 வேலைத்திட்டங்களில் 150வேலைத்திட்டங்கள் 3.43மில்லியன் செலவில் நிறைவுபடுத்தப்பட்டுள்ளது. இவ் வேலைத்திட்டங்களில் 10,936 பேர் பங்குபற்றியிருந்தனர். இத் திட்டங்கள் அனைத்தும் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள 6 பிரதேச செயலக பிரிவுகளிலும் இச் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

 0202 102 2

நாட்டுக்காக ஒன்றிணைவோம் தேசிய நிகழ்ச்சித்திட்டத் தொடரின் முல்லைத்தீவு மாவட்ட செயற்திட்டம் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் 30.05.2019 அன்று முல்லைத்தீவு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் வடமாகாண கௌரவ ஆளுநர் தலைமையில் இடம்பெற்றது. இதில் முல்லைத்தீவு அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர், மற்றும் பதவிநிலை உத்தியோகத்தர்கள், ஏனைய திணைக்களங்களின் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், பொலிஸ் மற்றும் பாதுகாப்பு பிரிவினர் பலரும் கலந்துகொண்டனர்.

pre3pre1pre2

சிங்கள - தமிழ் புதுவருடத்தை கொண்டாடுமுகமாகவும் சனாதிபதி அலுவலகத்தின் ”புனரோதயம்” சுற்றாடல் பாதுகாப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டத்துக்கு அமைவாகவும் 15.04.2019 இன்று மு.ப 11.17இற்கு உள்ள சுபநேரத்தில் முல்லைத்தீவு மாவட்ட செயலக வளாகத்தில் மரநடுகை நிகழ்வு இடம்பெற்றது. 

viber image 2019 04 15 11.17.25

முல்லைத்தீவு மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் மற்றும் கரைதுறைபற்று பிரதேச செயலகம் ஆகியவை இணைந்து சமுர்த்திப் பயனாளிகளின் உற்பத்திகளை ஊக்குவிக்குமுகமாக இன்று (10.04.2019) மாவட்ட செயலக முன்றலில் நடாத்துகின்ற சௌபாக்கியா விற்பனைக் கண்காட்சிக் கூடத்தினை முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திருமதி.றூபவதி கேதீஸ்வரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு காட்சிக்கூடங்களினை திறந்துவைத்தார்.

 

இந் நிகழ்வில் கரைதுறைபற்று பிரதேச செயலாளர், உதவிப்பிரதேச செயலாளர், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், சமுர்த்தி திணைக்கள உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

 

சௌபாக்கியா விற்பனைக் கண்காட்சியானது இன்றும் (10.04.2019), நாளையும் (11.04.2019) இடம்பெறவுள்ளது

 DSC 0040DSC 0045DSC 0052