இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தின் தலைவருமாகிய கௌரவ சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்கள் இன்று (09.01.2019) முல்லைத்தீவுக்கு விஜயம் செய்திருந்தார்.

அவரை முல்லைத்தீவு அரசாங்க அதிபர் திருமதி. றூபவதி கேதீஸ்வரன் அவர்களும், உத்தியோகத்தர்களும் வரவேற்றனர். தொடர்ந்து புதிய மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டத்திலும் கலந்துகொண்ட அவர் வாழ்வாதார அபிவிருத்தி திட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கான வாழ்வாதார உதவிப்பொருட்களையும், பிரதேச செயலகங்களுக்கு தண்ணீர் பௌசர்களையும் வழங்கிவைத்தார்.

மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் வேலைத்திட்டங்களையும் நேரில் சென்று பார்வையிட்டார்.

இந் நிகழ்வில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், ஏனைய திணைக்கள தலைவர்கள், மற்றும் திட்டப் பயனாளிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

DSC09819DSC09831DSC09839