சர்வதேச மகளீர் தின நிகழ்வுகள் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இன்று (21.03.2019) மேலதிக மாவட்ட செயலாளர் திரு.கோ.தனபாலசுந்தரம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி. திருமதி பூங்கோதை தயாளசீலன் அவர்களும், முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி உமாநிதி புவனராஜா அவர்களும் கலந்துகொண்டனர்.

இந் நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட செயலக முன்றலில் பெண் முயற்சியாளர்களால் அமைக்கப்பட்ட சந்தையினை மாவட்ட செயலாளர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் அவர்கள் திறந்துவைத்து நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.

தொடர்ந்து முல்லைத்தீவு நகர பகுதியிலிருந்து மாவட்ட செயலகம் வரையான நடைபவனியும் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து மாவட்ட செயலகத்தில் அமைக்கப்பட்ட விழா மண்டபத்தில் பல்வேறு கலைநிகழ்வுகளும், சாதனைப் பெண்கள் கௌரவிப்பும் இடம்பெற்றது..

இந் நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள், முல்லைத்தீவு மாவட்ட தொழிற்பயிற்சி அதிகாரசபை விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

DSC 1328DSC 1341DSC 1354