சர்வதேச கடற்கரை சுத்தப்படுத்தல் மற்றும் கடல்சார் வளங்களை பாதுகாக்கும் வாரம்

சர்வதேச கடற்கரை சுத்தப்படுத்தல் மற்றும் கடல்சார் வளங்களை பாதுகாக்கும் வாரம் 16 செப் தொடக்கம் 21 செப் வரை கடைப்பிடிக்கப்பட்டுவருகின்றது. அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் (18.09.2019) இன்று கடற்கரை துப்பரவுசெய்யும் நடவடிக்கைகள் மாவட்ட செயலாளர் திருமதி.றூபவதி கேதீஸ்வரன் அவர்களின் தலைமையில் முள்ளிவாய்க்கால் கடற்கரையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுடன் பொதுமக்கள் பலரும் வயது வேறுபாடின்றி கலந்துகொண்டனர்.

3 2 1