Online User
எங்களிடம் 23 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்
முகப்பு எங்களைப் பற்றி கண்ணோட்டம்

கண்ணோட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் அறிமுகம்......

மாவட்டத்தின் அமைவும் எல்லைகளும்

இலங்கையில் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் முல்லைத்தீவும் ஒன்றாகும். 1979ம் ஆண்டு தோற்றம் பெற்ற இந்த மாவட்டம் கிளிநொச்சி, மன்னார். திருகோணமலை, மற்றும் மன்னார் மாவட்டங்களாலும் ஒலுபுறத்தில் கடலாலும் சூழப்பட்ட பிரதேசமாகும். இது வடமாகாணத்தின் கிழக்குப்பக்கமாக பெருநிலப்பரப்பையும் கொண்டமைந்துள்ளது. இந்த மாவட்டத்தின் வடக்கெல்லையாக கிளிநொச்சி மாவட்டமும்,கிழக்கெல்லையாக கடற்பரப்பும், தெற்கு எல்லையாக திருகோணமலை மாவட்டமும், வவுனியா மாவட்டமும், மன்னார் மாவட்டத்தின் ஒரு பகுதியும் மேற்கெல்லையாக மன்னார் மாவட்டமும் அமைந்துள்ளன. அதன் நிலப்பரப்பானது வனப்பகுதிகளை உள்ளடக்கியும் ஆனால் மாவட்டத்தின் உட்புறமாகப் பரந்துபட்ட கடற்பகுதி நீங்கலாகவும் அண்ணளவாக 2516.9 சதுர கிலோமீற்றர் விஸ்தீரணம் கொண்டதாகும். இது நாட்டின் மொத்தப் பரப்பளவின் 3.8% விழுக்காட்டினைக் கொண்டதாகும்.

 

காலநிலை மற்றும் பௌதீகத் தன்மைகளும்

காலநிலை

உலர்வலயம் - பருவகால மழைவீழ்ச்சி முறைமை
வருடாந்த சராசரி மழைவீழ்ச்சி 1300 - 2416
வெப்பநிலை 23.00oC - 39.30oC ஆகும்.

பௌதீகத் தன்மை

முல்லைத்தீவு மாவட்டம் பொதுவாக தட்டையான நிலப்பரப்பினைக் கொண்டதாகும். நிலமானது பொதுவாக கிழக்கு வடக்காக சீராக சரிந்து செல்வதோடு மேற்குப்பகுதி மேற்கு மற்றும் தெற்காக நாய்ந்தும் செல்கின்றது. இந்த மாவட்டமானது 70கிலோமீற்றர் நீளமான கடற்கரையினை கொண்டுள்ளதோடு இறால் உற்பத்தியாகும் கொக்கிளாய், நாயாறு, ந்ந்திக்கடல் மற்றும் மாத்தளன் ஆகிய நான்கு கடல்நீரேரிகளையும் தன்னகத்தே கொண்டதாகும். இதன் நில உயரமானது கடல்மட்டத்திலிருந்து 36.5 மீற்றர் வரை வேறுபட்டுக்காணப்படுகின்றது. மண்ணின் தன்மையானது விவசாயத்திற்கு உகந்த செங்கபில மற்றும் செம்மஞ்சளாக இருபெரும் இருவாட்டி மணற்பிரிவுகாளாக அமைந்துள்ளது.

 

காணிப்பயன்பாடு

எமது மாவட்டத்தில் காட்டுநிலம், பற்றைக்காணிகள், தெங்குப்பயிர்நிலங்கள், விவசாயநிலங்கள், நீர்நிலைகள் போன்றவாறு மாவட்டத்தின் காணிப்பயன்பாடு 251,690 கெக்டேயர் பரப்பைக் கொண்ட பகுதி வித்தியாசமான பொருளாதார வளங்களை கொண்டுள்ளது. இவற்றில் காட்டுப்பகுதி 167,850 கெக்டேயரும் மாவட்டத்தில் 64.1 வீதம் கொண்டது. நீர்நிலைகளும் தரவைக்காணியும் 21,390 கெக்டேயரும் மாவட்டத்தில் 5.2 வீதம் கொண்டதும், விவசாய நிலமாக 44,040 கெக்டேயரும் மாவட்டத்தில் 5.1 வீதமும் ஆகும். மற்றும் மக்கள் வசிப்பிடங்களாக கொண்டுள்ளது.

மாவட்ட மக்களின் வாழ்க்கைமுறைகள்

இம்மாவட்டத்தின் பொருளாதாரம் பிரதானமாக விவசாயம், மீன்பிடி என்பவற்றில் தங்கியுள்ளது. மேலும் கால்நடை வளர்ப்பு, காடுவளர்ப்பு என்பனவும் பங்குவகிக்கின்றன. ஏறக்குறைய 4850 குடும்பங்களை சேர்ந்த 22,963 அங்கத்தவர்கள் விவசாயத்திலும் மீன்பிடியிலும் ஈடுபட்டுள்ளனர்.

 

விவசாயம்

இம் மாவட்டத்தில் விவசாயம் பிரதான வருமானத்தை ஈட்டித்தரும் வளமாக காணப்படுகின்றது. மொத்தமாக 80% விவசாயத்தில் தங்கியுள்ளனர். நெற்செய்கைக்கு சாதகமான 16,737 ஏக்கர் நிலத்தை இம் மாவட்டம் கொண்டுள்ளது. 3 பெரிய குளங்களும் 16 நடுத்தர அளவிலான குளங்களும் 7,109 ஏக்கர் பெரிய நெற்காணிகளிற்கு நீர்பாய்ச்சுவதுடன் 220 சிறிய குளங்கள் 11,749 பெரிய நெற்காணிகளிற்கு நீர்பாய்ச்சுகின்றன.

 

மீன்பிடி

மாவட்டத்தின் 70 கி.மீ நீளமான வளமான கடற்கரை படுக்கையும் நான்கு ஏரிகளான மாத்தளன், ந்ந்திக்கடல், நாயாறு, கொக்கிளாய் ஆகியவை மீன்பிடி அபிவிருத்திக்கு மிகவும் உகந்த்தாகவுள்ளன. இந்த ஏரிகள் இறால், நண்டு உற்பத்திக்கு பிரசித்திபெற்றவையாகும். பெரிய குளங்களில் நன்னீர் மீன்பிடியினை அபிவிருத்தி செய்யக்கூடிய வாய்ப்பு உள்ளது. குறிப்பிடத்தக்க எண்ணிக்கையான குடும்பங்களின் ஜீவனோபாய முயற்சியாக மீன்பிடித்தல் உள்ளதோடு அவர்களின் வாழ்வாதார முயற்சியினையும் வருமான வழிகளையும் பெருக்க இது பெரிதும் உதவும்.

 

 

மாவட்ட நீர்ப்பாசனத் தொகுதி

இம் மாவட்டம் விவசாய அபிவிருத்திக்கு பயன்படக்கூடிய நீர்வளங்களைக் கொண்டுள்ளது. நீர்ப்பாசன பயிர்ச்செய்கைக்கு கிளை பரப்பக்கூடிய நிலையாகப் பாய்கின்ற நதியெதுவும் காணப்படவில்லை. இம் மாவட்டத்தில் 03 பாரிய நீர்ப்பாசனக் குளங்களும் 16 நடுத்தர குளங்களும் 198 சிறிய நீர்ப்பாசனக் குளங்களும் காணப்படுகின்றன. மழைநீரே விவசாயத்திற்கான பிரதான நீர்வளமாகும்.

 

மாவட்டத்தின் அடிப்படை விடயங்கள்

நிருவாக நடவடிக்கைக்காக இந்த மாவட்டம் வன்னித் தேர்தல் தொகுதியின் ஒரு பகுதியைக் கொண்டதாக அமைந்துள்ளது. இந்த மாவட்டம் 6 நிருவாகப்பிரிவுகளையும் 136 கிராம அலுவலர் பிரிவுகளையும் 624 கிராமங்களையும் உள்ளடக்கியுள்ளது.

இல

பிரதேச செயலாளர் பிரிவு

கிராம அலுவலர் பிரிவுகள்

கிராமங்களின் எண்ணிக்கை

01

கரைதுறைப்பற்று

46

219

02

புதுக்குடியிருப்பு

19

179

03

ஒட்டுசுட்டான்

27

114

04

துணுக்காய்

20

35

05

மாந்தை கிழக்கு

15

68

06

வெலிஓயா

09

17

மொத்தம்

136

632

 

சனத்தொகை

இம் மாவட்டத்தின் சனத்தொகை 1981ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 77,515 ஆக இருந்தது. நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக 1991, 2001ம் ஆண்டுகளில் கணக்கெடுப்பு நடைபெறவில்லை. 2001 டிசெம்பர் மாதம் இம் மாவட்டத்தின் சனத்தொகை 180,401 ஆகும். இது மொத்த சனத்அதாகையில் 1.07% ஆகும். 31.12.2014ல் மாவட்டத்தின் மீளக்குடியமர்ந்த சனத்தொகை 130,332 ஆகும். இதன் விபரம் வருமாறு,

உதவி அரசாங்க அதிபர் பிரிவு

மீழ்குடியேற்றப்பட்ட சனத்தாகை

குடும்பங்களின் எண்ணிக்கை

அங்கத்தவர்களின் எண்ணிக்கை

கரைதுறைபற்று

12911

41190

புதுக்குடியிருப்பு

12271

38621

ஒட்டுசுட்டான்

5710

18796

துணுக்காய்

3703

11611

மாந்தை கிழக்கு

2810

8925

வெலிஓயா

3336

11189

40741

130332

 

சுகாதாரம்

மாவட்டத்திலுள்ள 05 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் இம் மாவட்டத்தில் இயங்குகின்றன. 67 கிராமிய சுகாதார நிலையங்கள் உள்ளடங்கலாக 04 நோய்த்தடுப்பு மற்றும் பாதுகாப்பு நிலையங்களும் முல்லைத்தீவு சுகாதார வைத்திய அதிகாரியின் கீழ் இயங்கி வருகின்றது.

 

கல்வி

இரண்டு கல்வி வலயங்கள் (முல்லைத்தீவு, துணுக்காய்) 124 பாடசாலைகள் 1779 ஆசிரியர்களுடன் 27,410 மாணவர்களுடனும் இயங்கிவருகின்றது.

 
மாவட்ட செயலாளர்
ga.png