முல்லைத்தீவு - அரச அதிபர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வு இன்று (19.12.2018) கரைதுறைபற்று பிரதேச சபை மைதானத்தில் நடைபெற்றது. இன்றய இறுதிநாள் நிகழ்வில் மாவட்ட செயலக அணியினருக்கும் தபால் திணைக்கள அணியினருக்கும் இடையில் உதைபந்தாட்ட போட்டியும், ஆண்களுக்கான கயிறுழுத்தல் போட்டியும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பெண்கள் அணியினருக்கும் மாவட்ட செயலக பெண்கள் அணியினருக்குமான கயிறுழுத்தல் போட்டியும் இடம்பெற்றது.உதைபந்தாட்ட போட்டியில் தபால்திணைக்களத்தினரும் கயிறுழுத்தல் போட்டியில் மாவட்ட செயலக அணியினரும் வெற்றியினை பெற்றுக்கொண்டனர்.

முல்லைத்தீவிலுள்ள 19திணைக்களங்கள் பங்குபற்றிய இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார். மற்றும் ஏனைய திணைக்களங்களின் தலைவர்கள், உத்தியோகத்தர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் பலரும் கலந்துகொண்டனர். அத்துடன் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் வெற்றியீட்டிய அணியினருக்கான சான்றிதழ்களும் வெற்றிக்கேடயங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

2018 ம் ஆண்டுக்கான அரச அதிபர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டியில் அதிகூடிய வெற்றிக்கிண்ணங்களை பெற்று மாவட்ட செயலக அணியினர் முன்னணியில் திகழ்கின்றனர்

48429665 2194125297311052 715372815133442048 n.48382589 2194125623977686 9190539872325074944 n48389350 2194125320644383 5919487685860261888 n